| 245 |
: |
_ _ |a திரு ஊரகம் ஊரகத்தான் கோவில் - |
| 246 |
: |
_ _ |a திரு ஊரகம் |
| 520 |
: |
_ _ |a கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மக்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. தொண்டை மண்டலத்து இருபத்தியிரண்டு திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதாவது இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் இந்த ஊரகம் ஸ்தலத்திற்குள்ளேயே எழுந்தருளியிருக்கின்றனர். இந்த மூன்று திவ்ய தேசங்களும் தொண்டை நாட்டிற்குள் எங்கிருந்தனவென்று அறியமுடியவில்லை.எவ்விதம் மூவரும் இங்குவந்து புகுந்தனர் என்பதும் அறியுமாறில்லை. நிச்சயமாக இத்தலங்கள் காஞ்சி நகருக்கு வெளியே உள்ள திவ்யதேசங்களைப் போன்று எங்காவது தனித்திருந்திருக்க வேண்டும். மதம் அல்லது அரசியல் சார்ந்த யாதாயினுமோர் காரணத்தால் உண்டான விளைவுகளால் இத்தலங்கள் மூன்றும் இடம் பெயர்ந்து அல்லது இப்பெருமான்கள் மூவரும் இடம் பெயர்ந்து இங்கு வந்து சேர்ந்தனர் எனலாம். இம்மூன்றும் காஞ்சிக்கு வெளியில் மிகத் தொலைவிலோ அல்லது காஞ்சிக்கு அருகாமையிலோ ஒன்றுக்கொன்று சமீப தூரத்தினதாகவோ இருந்திருக்க வேண்டும். அதனாற்றான் ஏதோவொரு காரணத்தால் இடம் பெயர வேண்டிய சூழல் உருவானவிடத்து மூவரும் ஒருங்கே பெயர்ந்துள்ளனர். காஞ்சிக்கு வெளியே உள்ள ஊர்களில் இத்தலத்துப் பெயர்களின் சாயல்களை கொண்ட ஊர்களையோ, வரலாற்று ரீதியாக அழிந்துபட்ட அல்லது இன்றைய வரலாற்றுப் போக்கோடு வர இயலாதவாறு மண்டிக் கிடந்து விட்ட ஏதாவது சில தொல்லியல் கோவில்களையோ ஆய்வு செய்யும்போது அல்லது ஆய்வு செய்தால் உண்மை வரலாம். இவைகள் நிச்சயமாக காஞ்சிக்குள்ளே இருந்திருக்க முடியாது. அவ்வாறு இருந்திருப்பின் ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று விளித்திருப்பார். ஊரகம் தவிர மற்ற இந்த மூன்று திவ்ய தேசங்கட்கு காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கை அருளவில்லை. மேலும் நீரகத்தை மங்களாசாசனம் செய்யும்போது நீரகத்தாய் நெடு வரயினுச்சி மேலாய் (2059) என்று நீரகத்தானுக்கு நெடுவரை வேங்கடத்தானோடு சம்பந்தங் காட்டுகிறார். அதே சமயம், அதே பாடலில் ஊரகத்தானை மங்களாசாசனம் செய்யும் போது “நிறைந்த கச்சி ஊரகத்தாய்” என்று ஊரகத்திற்கும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறார். எனவே காஞ்சிக்கு வெளியே இருந்த இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் அவர்கள் ஊரைவிடுத்து இந்த ஊரகத்திற்குள் வந்தெழுந்தருளியமை வரலாற்றின் அடிப்படையிலும் சமயஞ் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும் ஆராயத்தக்கதாகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, திருஊரகம், ஊரகத்தான், காஞ்சிபுரம், பெரியகாஞ்சி, பேரகம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 12.8405575 |
| 915 |
: |
_ _ |a 79.70323697 |
| 916 |
: |
_ _ |a உலகளந்த பெருமாள், திரிவிக்கிரமன் |
| 917 |
: |
_ _ |a பேரகத்தான் |
| 918 |
: |
_ _ |a அமுதவல்லி நாச்சியார் |
| 923 |
: |
_ _ |a நாக தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி |
| 927 |
: |
_ _ |a திருமழிசையாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். நம்மாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்று ஆன்றோர் மொழிவர். திருவூரகத்தில் நின்றபடியை ஆதல் என்பது நம்பிள்ளை ஈடு. இந்த ஒரு திவ்ய தேசத்திற்குள்ளாகவே நீரகம், காரகம்,கார்வானம் ஆகிய திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திவ்யதேசங்கள் இருப்பதால் இத்தலத்தை தரிசித்தால் நான்கு திவ்ய தேசங்களைத் தரிசித்ததாகி விடும். ஊரகம், நீரகம், காரகம், கார் வானம் ஆகிய நான்கு திவ்யதேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பிள்ளைப் பெருமாளையங்கார் தமது 108 திருப்பதியந்தாதியில் இத்தலத்திற்கான பாசுரங்களை இட்டருளினபோது, மகாபலியிடம் எம்பெருமான் மூன்றடி மண்வேண்ட மகாபலி நீர்வார்த்து (தாரை வார்த்துக்) கொடுத்ததை நினைவூட்டுகிறார். |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப் பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம்.இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும் காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது (பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம் பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம். |
| 930 |
: |
_ _ |a வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் மூன்றடி மண் வேண்டிய எம்பெருமான் திரு விக்கிரம அவதாரம் எடுத்து மகாபலிச்சக்ரவர்த்தியை பாதாளத்திற்கு அனுப்பினான். பாதாளம் புக்க மாகபலிக்கு, தம்பொருட்டு எம்பெருமான் உலகளந்து நெடிய திருமேனியுடன், திருவிக்ரமனாய் நின்ற திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லையே, எம்பெருமானின் பாதம் பட்டு பாதாளலோகத்தில் புதுந்துவிட்டோமே, நம்பொருட்டு எழுந்த அவதாரத்தின் முழு ரூபத்தை முழுமையாக காணமுடியவில்லையே என்றெண்ணி வருந்தி, திருவிக்ரம அவதாரத்தைக் காட்டியருள வேண்டுமென பாதாளலோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர். பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக என்னால் தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி தரும் பொருட்டு இந்த இடத்திற்கு அருகிலேயே ஆதி சேடனாக காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும். ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம் என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இங்கு எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப் பேரெழில் பொருந்தியவர். இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன் ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு ஊரகத்தான் ஆயிற்றார் போலும். |
| 932 |
: |
_ _ |a இக்கோயிலின் கருவறை விமானம் ஸார ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பாகும். திருஊரகம் பெருமாள் கோயிலுக்குள்ளேயே நீரகம், பேரகம், கார்வானம் ஆகிய திவ்ய தேசங்கள் அமைந்திருக்கின்றன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
| 935 |
: |
_ _ |a பெரிய காஞ்சி என அழைக்கப்படும் பகுதியில் காமாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் நான்கு ராஜவீதிகட்கு மத்தியில் அமைந்துள்ளது இத்தலம். |
| 936 |
: |
_ _ |a காலை 5.00 -12.30 முதல் மாலை 4.30-9.30 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000137 |
| barcode |
: |
TVA_TEM_000137 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000137/TVA_TEM_000137_காஞ்சிபுரம்_திருஊரகம்--பெருமாள்-கோயில்-கொடிமரம்-பலிபீடம்-0002.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000137/TVA_TEM_000137_காஞ்சிபுரம்_திருஊரகம்--பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg
TVA_TEM_000137/TVA_TEM_000137_காஞ்சிபுரம்_திருஊரகம்--பெருமாள்-கோயில்-கொடிமரம்-பலிபீடம்-0002.jpg
TVA_TEM_000137/TVA_TEM_000137_காஞ்சிபுரம்_திருஊரகம்--பெருமாள்-கோயில்-மண்டபமுகப்பு-0003.jpg
TVA_TEM_000137/TVA_TEM_000137_காஞ்சிபுரம்_திருஊரகம்--பெருமாள்-கோயில்-ஆதிசேஷன்-0004.jpg
|